'வாழை' படத்தின் 'தென்கிழக்கு தேன் சிட்டு' வீடியோ பாடல் வெளியீடு

3 months ago 27

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.

இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை'. இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.

இந்தநிலையில், தற்போது 'வாழை' படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, 'தென்கிழக்கு தேன் சிட்டு' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article