விரைவில் சந்திக்கிறேன்...சென்னை வீரர் வெளியிட்ட பதிவு

3 hours ago 2

மும்பை,

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது.13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இரண்டு நாளில் இரு ஆட்டங்கள் இடம் பெறுகிறது. மே 29-ந்தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ந்தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 1-ந்தேதி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ந்தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் நிறுத்தப்பட்டதால் நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் அவர்களது அணியில் இணைய உள்ளனர்.  இந்த நிலையில் சென்னை வீரர் டேவால்ட் பிரேவிஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார் .

சென்னை அணி அடுத்த போட்டியில் வரும் 20ம் தேதி ராஜஸ்தான் அணியுடன் மோத உள்ளது . 


BREVIS IS COMING...!!!!

- The CSK boy. pic.twitter.com/CCBOrsBVKT

— Johns. (@CricCrazyJohns) May 14, 2025


Read Entire Article