வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையின்போது பேய் விரட்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பேய் விரட்டும் விழா நேற்று நடந்தது. முன்னதாக பூசாரி குடும்பத்தினர், பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முன்பே செருப்பு அணியாமல் ஒரு வாரம் விரதமிருந்தனர். இதையடுத்து பேய் விரட்டுவதற்காக முன்னோர்கள் வடிவமைத்துக் கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு, பூசாரிகள், தாரை, தப்பட்டை, மேள வாத்தியம் முழங்க ஆற்றங்கரைக்கு சென்றனர்.
அங்கு கூடியிருந்த பெண்களில் சிலரை அழைத்து தலைமுடியை கையில் பிடித்துக் கொண்டு, முறத்தால் தலையில் 3 முறை அடித்தனர். பிறகு விபூதி பூசி அனுப்பினர். விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்திய பிறகு ,பேய் விரட்டும் பூசாரிகளிடம் முறத்தடி வாங்கினால், இளம்பெண்களை சூழ்ந்த இருள் நீங்கி நல்ல வரன், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த வினோத விழாவில், இளம்பெண்கள் சிலர் தானாக முன் வந்து வரிசையில் காத்திருந்து, பூசாரியிடம் முறத்தடி வாங்கிக்கொண்டனர்.
The post வாழப்பாடி அருகே பேய் விரட்டும் வினோத திருவிழா: இளம்பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.