வாலிபருக்கு தூக்கு தண்டனை பிரேமலதா வரவேற்பு

4 months ago 16

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: ரயிலில் தள்ளி மாணவியை கொன்ற வழக்கில் குற்றவாளி சதீசுக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதுமாதிரி அதிகபட்ச தண்டனை வழங்கும் போதுதான் பெண்களுக்கு ஏற்படும் அநீதியிலிருந்து நியாயம் கிடைக்கும். சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கியதற்குத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post வாலிபருக்கு தூக்கு தண்டனை பிரேமலதா வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article