வாலிபருக்கு 23 ஆண்டு சிறை

1 day ago 1

திண்டுக்கல், ஜன. 30:குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (24). ஆம்னி பஸ் டிரைவர். இவர் கடந்த 2024ம் ஆண்டு பிப்.7ல் 15 வயது பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை ெகாடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் வடமதுரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிறுமி, ஈஸ்வரனுடன் சென்றது தெரியவந்தது. வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞராக மைதிலி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வேல்முருகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றவாளி ஈஸ்வரனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சத்தி 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

The post வாலிபருக்கு 23 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Read Entire Article