பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: பிப்.28ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு

3 hours ago 1

சென்னை: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற பிப்.28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் வகுப்பு மாணவ – மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

2024-2025ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே, கல்வி உதவித்தொகைக்கு மாணாக்கர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதன் கடைசி நாளாக பிப்.28ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: பிப்.28ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article