பெரம்பலூர்,பிப்.6: வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கான வழிகாட்டி நூல்களை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று 5ஆம்தேதி 10,11,12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு \”தேர்வை வெல்வோம்\” என்ற வினா-விடை கையேட்டினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கினார். பத்தாம் வகுப்பில் 72 பேருக்கும், 11ஆம் வகுப்பில் 94 பேருக்கும், 12ஆம் வகுப்பில் 90 பேருக்கும் வழிகாட்டி நூல்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், மாணவர்களின் நலனுக் காக தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களில் குறிப்பாக புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் \”தேர்வை வெல்வோம்\” என்ற வினா விடை புத்தகத்தைப் பயன்படுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் பேசும் பொழுது, பெரம்பலூர் தொகுதி மாணவர்களின் நலன் கருதி வினா விடை புத்தகத்தை வழங்க வேண்டும் என்று அமைச்ச ரிடம் வேண்டுகோள் வைத் ததன் அடிப்படையில் மாணவர்களுக்கு நூல்கள் வழங்கிய அமைச்சருக்கு பெரம்பலூர் தொகுதி மக் களின் சார்பாக பாராட்டுக ளை தெரிவித்துக் கொள் கிறேன் எனத்தெரிவித்தார்.விழாவில் அட்மா தலைவர் ஜெகதீசன், முன்னால் ஊராட்சித் தலைவர் ரவிச் சந்திரன், பள்ளி மேலாண் மைக் குழுத் தலைவர்(பொ) பிச்சைபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் வீரையன், அகிலாண்டேஸ் வரி, லதா உள்ளிட்ட ஆசி ரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு நன்றி கூறினார்.
The post வாலிகண்டபுரம் அரசு பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டி நூல்கள் appeared first on Dinakaran.