டெல்லி: பாக் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 விமான நிலையங்கள் மே 15ம் தேதி வரை மூடபட்டுள்ளது. அம்பாலா, அவந்திப்பூர், புஜ், பிகானெர், சண்டிகர், ஹிண்டன், ஜம்மு, ஜெய்சால்மர், ஜோத்பூர், குலு மணாலி, லே, லூதியானா, பதான்கோட், பாட்டியால விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையங்களில் கூடுதல் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாக வர அறிவுறுத்தப்படுகிறார்கள். விமான ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளவும்.
இந்தியாவில் பாகிஸ்தானுடனான பதற்றத்தின் காரணமாக, மே 15 காலை வரை 32 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது.
அடம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சால்மர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், காண்ட்லா, கங்க்ரா (காகல்), கேஷோட்,கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லே, லூதியானா, முந்த்ரா, நலியா, பதான்கோட், பட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சரசாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ், உத்தர்லை ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
The post பாக் டிரோன் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 விமான நிலையங்கள் மூடல் appeared first on Dinakaran.