
வாரணாசி,
வாரணாசியில் இன்று நடைபெற்ற விழாவில் ரூ.3,880 கோடி மதிப்பிலான 44 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். கிராமப்புற மேம்பாட்டை மையமாகக் கொண்ட 130 குடிநீர்த் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், பிந்த்ராவில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் ஆன்மா அதன் பன்முகத்தன்மையில் இருக்கிறது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் ஒன்றாகச் சுமந்து இந்தியா முன்னேறி வருகிறது. காசியின் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான கலாச்சாரம் காணப்படுகிறது" என்று கூறினார்.