
லக்னோ,
உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்சு சுக்லா(40). இந்திய விமானப்படையில் கடந்த 1985-ம் ஆண்டு பைலட்டாக சேர்ந்தார். ஏன்-32, டார்னியர், ஹாக், ஜாக்குவார், மிக்-21, மிக்-29 மற்றும் சுகோய் போர் விமானங்களில் 2000 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளார். இவரை விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக இஸ்ரோ தேர்வு செய்தது. இதையடுத்து இவர் ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்துக்கு பயிற்சிக்காக கடந்த 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்டார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்(ஐஎஸ்எஸ்)க்கு இந்த ஆண்டு அனுப்புகிறது. இந்த விண்கலத்தின் கமாண்டராக நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெகி விட்சன் செல்கிறார்.
இவருடன் செல்ல இஸ்ரோ விண்வளி வீரர் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வாகியுள்ளார். இவர்களுடன் போலந்தை சேர்ந்த வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி -விஸ்நியூஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த வீரர் டிபோர் காபு ஆகியோர் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வரும் மே மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபன்சு சுக்லா செல்ல இருப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையில் இந்திய வரலாறு படைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.