மிர்ச்சி சிவா நடித்த "சுமோ" படத்தின் தீம் பாடல் வெளியீடு

19 hours ago 2

சென்னை,

நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ. இயக்குனர் ஹோசிமின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டே இப்படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது. 'சுமோ' திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை. இத்திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது. தற்பொழுது படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 'சுமோ' படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

A Tribute Fit for a Giant! Presenting the Power-Packed Anthem for our Sumo!https://t.co/G8VMNbbSegSumo in theatres from 25th April!@IshariKGanesh @VelsFilmIntl @sphosimin @actorshiva @sumoActor @priyaanand @DirRajivMenon @cinemainmygenes @nivaskprasanna @Ashkum19pic.twitter.com/uHoj4djyHw

— Vels Film International (@VelsFilmIntl) April 18, 2025
Read Entire Article