வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

4 months ago 18

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், இன்று ஞாயிறு வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை அவர்கள் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read Entire Article