வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை

3 months ago 23

இந்த வார ராசிபலன்

மேஷம்

எதிர்பாராத மாற்றங்களை சந்தித்து செயல்பட வேண்டிய காலகட்டம் இது. இல்லத்தரசிகளை பொறுத்தவரை குடும்ப சூழ்நிலை சுமுகமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழில் துறையினர் புதிய திட்டங்களை மேற்கொண்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும். வியாபாரிகள் வாடிக்கையாளர் கருத்துக்களை கவனத்தில் கொள்வது அவசியம். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மதிப்பை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் புதிய பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். கலைத்துறையினர் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெறுவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வெளியிடங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் தண்ணீர் உள்ளிட்ட பானங்களை பருகுவதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

நீண்ட நாட்களாக மனதில் திட்டமிட்ட விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழில்துறையினர் கடந்த கால பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள். வியாபாரிகள் பழைய கடன்களை தீர்த்து புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் கடன் தரும் நிதி நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினர் உழைப்பிற்கு ஏற்ற பலன் அடைவர். மீடியாவில் இருப்பவர்கள் தங்களது உயரதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் இரவு பயணங்களையும், புதன், வியாழன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

முயற்சிகள் பல தடைதாமதங்களுக்குப் பிறகு காரிய வெற்றி ஏற்படும். இல்லத்தரசிகள் குடும்ப செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் துறையினர் பல முறை முயற்சி செய்த பின்னரே காரிய வெற்றி பெற முடியும். வியாபாரிகள் புதிய கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் புது நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் தகவல் தொழில்நுட்ப பங்குகளை வாங்குவதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இது உற்சாகமான வாரம். மீடியாவில் இருப்பவர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்ற வேண்டும். கால் பாதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

கடகம்

பல இடங்களுக்கு பிரயாணம், புது நபர்களை சந்திப்பது என்று பிசியாக இருப்பீர்கள். குடும்ப ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வர். தொழில்துறையினர் தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள ஏற்ற சமயம் அமையும். உத்தியோகஸ்தர்கள் கண்டிப்பாக மேலதிகாரிகளை அனுசரித்து பணியாற்ற வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வர்த்தக வாய்ப்புகளை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் பொறியியல் மற்றும் உணவுப் பொருள் சார்ந்த பங்குகளில் ஆதாயம் அடைவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் புதிய சிக்கல்களை சந்தித்து வெளிவர வேண்டும். கலைத்துறையினர் வேற்று மொழி பேசும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சளி, காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமடையும். வெள்ளி, சனி இரு நாட்களில் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

பொறுமையோடு மாற்று முறைகளை கையாண்டு காரிய வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது. குடும்ப நிலை சுமுகமாக இருக்கும். தொழில் துறையினர் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை செயல்படுத்தலாம். வியாபாரிகளுக்கு நல்ல காலகட்டம். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பாராத ஆதாயம் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் திரவ ரசாயன தயாரிப்பு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவர். கலைத்துறையினர் இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவார்கள். மீடியாவில் பணியாற்றுபவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம். வெளியிடங்களுக்கு செல்லும்போது காலம் தவறி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்.

கன்னி

மனதில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழில்துறையினர் எதிர்பார்த்த மாற்றங்களை மேற்கொண்டு வளர்ச்சி பெறலாம். வியாபாரிகள் தகவல் தொடர்புகளை மேம்படுத்தி புதிய வளர்ச்சி பெறுவர். உத்தியோகஸ்தர்கள் கடந்த கால சிக்கல்களில் இருந்து விடுபடுவர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்து ஆதாயம் அடையலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பொறியியல் மற்றும் நிதிநிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறை அன்பர்கள் பல தடைகளை கடந்து சாதனைகளை படைப்பார்கள். மீடியாவில் இருப்பவர்கள். துணிச்சலாக செயல்பட்டு பணிகளை முடிக்க வேண்டும். காய்ச்சல், சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் குணமாகும்.

துலாம்

அமைதியான காலகட்டம் இது. குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் அமைதி பாதிக்கப்படாது. தொழில் துறையினர் புதிய மாற்றங்களை செய்து வளர்ச்சி காண்பர். வியாபாரிகள் வர்த்தக விரிவாக்கம் செய்ய பயணங்களை மேற்கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற நன்மை அடைவர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்கள் மூலம் பிரபலமாவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் புதிய பங்குகளை வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையினர் மனத்தயக்கத்தை அகற்றி துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறவேண்டும். மீடியாவில் பணியாற்றுபவர்கள் மன உளைச்சல்களை பொருட்படுத்தாமல் பணியாற்ற வேண்டும். காய்ச்சல், தொண்டை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமாகும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

மனம் உற்சாகமாக இருந்தாலும் உடலில் ஒருவித அசதி இருக்கும். குடும்ப பொருளாதார நிலை நல்ல விதமாக இருக்கும். தொழில் துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டும். வியாபாரிகள் பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் திட்டப்பணிகள் நடக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் ஆடை ஆபரணங்கள், உணவு பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவர். கலைத்துறையினர் பல சிரமங்களை சந்தித்து சாதனை புரிவார்கள். மீடியாவில் பணியாற்றுபவர்கள் மற்றவர்களை எதிர்பார்க்காமல் தங்கள் பணிகளை செய்ய வேண்டும். மன உளைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்படலாம்.

தனுசு

விட்டுக்கொடுத்து செயல்பட்டு காரிய வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது. குடும்பத்தில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு சுமுகமாக முடியும். தொழில் துறையினருக்கு சாதகமான காலகட்டம். வியாபாரிகள் புதிய கிளைகளை தொடங்க நல்ல சூழல் அமைந்துள்ளது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிதானமாக செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை செயல்படுத்தலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் ரசாயனம், எந்திர தளவாட பொருட்கள் சம்பந்தமான பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவர். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெறுவார்கள். மீடியாவில் பணியாற்றுபவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகளை அடைவார்கள். தலைவலி, உடல் அசதி ஏற்பட்டு நீங்கும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளையும், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இரவுப் பயணங்களையும் தவிர்க்க வேண்டும்.

மகரம்

மன அழுத்தம் ஏற்பட்டு படிப்படியாக நீங்கும். குடும்ப சிக்கல்களில் நிதான போக்கை கடைபிடிக்க வேண்டும். தொழில் துறையினர் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை நம்பாமல் தாங்களே பணிகளை செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் நடைபெறும் திட்டங்களை கவனமாக பார்வையிட வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் வெளிநாட்டு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறலாம். கலைத்துறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகளை பெறுவர். மீடியாவில் பணியாற்றுபவர்கள் புகழ் பெறும் காலகட்டம். ஜலதோஷம், மன உளைச்சல் ஏற்பட்டு அகலும்.

கும்பம்

எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காத காரணத்தால் மன அழுத்தம் ஏற்படும். குடும்ப நிலையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் துறையினர் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி போன்ற வெளிநாட்டு தொடர்பு வியாபாரிகள் லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த பயணங்களை மேற்கொள்வர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்கள் தொடங்குவதன் மூலம் ஆதாயம் பெறலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் நிதித்துறை பங்குகள் மூலம் லாபம் பெறுவர். கலைத்துறையினர் உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் அடைவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் திட்டமிட்டு பணிகளை அந்தந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். அடிவயிற்றுப் பகுதிகளில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மீனம்

எதிர்பாராத செலவுகள் காரணமாக மனதில் அழுத்தம் ஏற்படும். குடும்பத்தில் மூன்றாம் நபர் காரணமாக குழப்பம் ஏற்பட்டு அகலும். தொழில் துறையினர் சிக்கல்களை நுட்பமாக கையாண்டு வளர்ச்சி பெறுவர். வியாபாரிகள் மற்றவர்களை நம்பாமல் தாங்களே அனைத்து விஷயங்களையும் நேரடியாக மேற்பார்வை செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்கள் விருப்பு வெறுப்பு பாராமல் பணியாற்ற வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் தொழிலாளர்களிடம் நேரடியாக பேசி அவர்களது குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் எண்ணெய் வித்துக்கள், தகவல்தொடர்பு ஆகிய பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் புதிய தொடர்புகள் மூலம் நன்மை பெறுவர். மீடியாவில் பணியாற்றுபவர்கள் சூழலுக்கு ஏற்ப திட்டங்களில் மாற்றம் செய்து செயல்பட வேண்டும். முதுகு வலி, இடுப்பு வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும்.

 

Read Entire Article