கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாவிட்டால் எட்டாக்கனியாகிவிடும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 hours ago 3

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;

"அனைவரும் படிக்க வேண்டும் என்று சொல்வது திராவிட மாடல். இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்பது பாஜகவின் காவி மாடல். நம் உயர்வுக்கும், மேண்மைக்கும் அடித்தளமாக இருப்பது கல்விதான். அறிவுதான் நமது ஆயுதம். கல்விக்கு தடை போட நினைக்கும் பாஜகவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு போர் வாள் சுழற்றுகிறது. தேசியக் கல்விக்கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்துவிடும். இட ஒதுக்கீடு இருக்கும் வரைதான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கும்.

தேசியக் கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் வளர வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித்ஷாவே சொல்லியுள்ளார். எது நடக்கும் என நாம் எச்சரித்தோமோ அதனை அமைச்சர் உறுதி செய்துள்ளார். இந்தியை தடுக்க ஒரே வழி கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதுதான். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாவிட்டால், கல்வி என்பது அனைவருக்கும் எட்டாக்கனியாகிவிடும்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Read Entire Article