வார ராசிபலன் 06.04.2025 முதல் 12.04.2025 வரை

20 hours ago 2

இந்த வார ராசிபலன்

மேஷம்

எப்போதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ள மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதாரம் மன நிம்மதி தரும். சொந்த பந்தங்களை அனுசரித்து செல்லவும். தடை தாமதங்களை சந்தித்து வந்த தொழில் துறையினர், வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர். அரசு, தனியார் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளைப் பெற்று உற்சாகம் அடைவர். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு சிக்கல்கள் அகலும் காலகட்டம் இது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா சென்று மகிழ்வர். தோலில் பாதிப்பு, மனக்குழப்பம் ஆகியவை ஏற்பட்டு தக்க சிகிச்சையால் அகலும். கருப்பு நிற உடைகளை அணிவதை தவிர்ப்பதோடு, குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை பரிசாக அளிப்பதாலும் பல நன்மைகள் வந்து சேரும்.

ரிஷபம்

தான் வாழ பிறரைக் கெடுக்கும் எண்ணம்கூட இல்லாத ரிஷபம் ராசியினருக்கு, மனதில் புதிய நம்பிக்கை உருவாகி உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை உயரும். சினிமா, மீடியா தொழில் துறையினர், கட்டுமான பொருள்கள் வியாபாரிகள் சிக்கல்களை சந்தித்து வெற்றிகரமாக கடந்து செல்வர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் காலத்துக்கேற்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலியம், எரிவாயு நிறுவன பங்குகளில் எதிர்பார்த்த லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால நலனுக்கான புது விஷயங்களை அறிந்து கொள்வர். தொண்டை வலி, காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். முடிந்தவரை அருகில் உள்ள கோவில்களில் ஏதேனும் கைங்கரியங்கள் செய்வது, முதியோர்களுக்கு அன்னதானம் உள்ளது பொருள் தானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்

சுயமாக சிந்தனை செய்து, சுதந்திரமாக செயல்பட்டு மதிப்பு பெறும் மிதுனம் ராசியினர் இந்த வாரம் பல நன்மைகளைப் பெறுவர். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. எந்தச் சிக்கலையும் சமாளிக்கும் மனதிடம் ஏற்படும். ஓட்டல், ஆடை, ஆபரண தயாரிப்பு தொழில் துறையினர், ஏற்றுமதி-இறக்குமதி பொருள் வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயம் பெறுவர். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணிகளில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்யவும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு விமான, கப்பல் நிறுவன பங்குகளால் நன்மை ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் உதவுவார்கள். ஜீரணக்கோளாறு, மன அழுத்தம், அடிவயிறு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சையால் விலகும். உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நீர்மோர், தண்ணீர் ஆகியவற்றை தானமாக வழங்குவதாலும், மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு இயன்றவரை உதவிகள் செய்வதன் மூலமும் பல நன்மைகள் உண்டு.

கடகம்

மனதாலும் மற்றவருக்கு கெடுதல் நினைக்காமலும், துன்பத்தில் தாமாக சென்று உதவும் குணம் கொண்ட கடகம் ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும். செலவுகளை திறமையாகச் சமாளித்து, சேமித்தும் விடுவீர்கள். மருத்துவம், விவசாயம் ஆகிய தொழில் துறையினர், வாகனம், கட்டுமான பொருள் வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணிகளை செய்யலாம். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் மதிப்பை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிதானமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி மூலம் எதிர்காக முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் கிடைக்க பெறுவார்கள். கணுக்கால் வலி, முட்டி வலி, வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். பொது இடங்களில் நீர்மோர், குடிநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலமும், குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்வதன் மூலமாகவும் சிக்கல்கள் விலகும்.

சிம்மம்

நேர்கொண்ட பார்வையும், மண்ணில் யாருக்கும் அஞ்சாத தன்மையும் உள்ள சிம்மம் ராசியினர் இந்த வாரம் சமூக முக்கியத்துவம் பெற்ற மனிதர்களாக உலா வருவார்கள். குடும்ப பொருளாதார நிலையில் எதிர்பார்த்த தனவரவு உண்டு. சமூகத்தில் மதிப்பு உயரும். சுற்றுலா, பெட்ரோல் பங்க் தொழில் துறையினர், வேளாம் விளைபொருள், ஆடை-ஆபரண வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவர். அரசு, தனியார் உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் தாங்களே களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை செய்யலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருந்து பொருள் நிறுவனம், ரியல் எஸ்டேட் துறை ஆகிய பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். ஜலதோஷம், வாய்ப்புண், தொண்டை வலி, உடல் அசதி ஆகிய சிக்கல்கள் ஏற்பட்டு தகுந்த ஓய்வு மற்றும் மருத்துவம் மூலம் குணமடையும். முடிந்தவரை மௌனமாக இருப்பதும், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை விரதம் இருப்பதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

கன்னி

சிக்கல் எதுவானாலும் அதன் அடிப்படையை கண்டறிந்து ஏற்கவோ, விலக்கவோ தீர்மானிக்கும் மனத்திட்பம் கொண்ட கன்னி ராசியினர் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப பொருளாதார நிலையில் சிக்கல்கள் விலகி, எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் தீரும். ஐ.டி, மின் சாதன தயாரிப்பு தொழில்துறையினர், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், வியாபாரிகள் திட்டமிட்ட நன்மைகளை பெறுவர். அரசு உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினருக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய நிறுவனம், சுற்றுலா நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பில் திறமைகளை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் அவற்றை கவனமாக மேற்கொள்ள வேண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் நீங்கும். வீட்டில் உள்ள பெரியவர்களை வணங்கி ஆசிகளை பெறுவதாலும், வயது முதிர்ந்த தம்பதியருக்கு பரிசுகள் கொடுத்து வாழ்த்துக்களை பெறுவதாலும் பல சிக்கல்கள் விலகும்.

துலாம்

இன்பத்தில் துள்ளாமலும், துன்பத்தில் துவளாமலும் சமநிலை காக்க வேண்டும் என்ற கொள்கை உடைய துலாம் ராசியினரை இந்த வாரம் பிரிந்த உறவுகள் நாடி வரும். குடும்ப செலவுக்கேற்ற தக்க பொருள் வரவு உண்டு. குடும்பத்தில் குதூகலம் நிலவும். பால்பொருள் உற்பத்தி, ஓட்டல் தொழில் துறையினர், ரசாயன பொருள், வாகன வியாபாரிகள் தொழில் வெற்றிக்கான விஷயங்களை செயல்படுத்துவார்கள். அரசு பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் நன்மை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு, நிதி நிறுவன பங்குகளில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்று பொழுதை கழிப்பார்கள். தலைசுற்றல், தோல் பாதிப்பு மற்றும் மனக்குழப்பம் ஆகியவை ஏற்பட்டு விலகும். இயன்றவரை மௌனமாக இருப்பதும், குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் மந்திரங்கள் அல்லது பாசுரங்களை மௌனமாக சொல்லி வருவதும் பல நன்மைகளை தரும்.

விருச்சிகம்

ஆடாத ஆட்டம் ஆடினாலும் காரியத்தில் கண்ணாக இருந்து ஜெயிக்கத் துடிக்கும் சாதனையாளர்களான விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வீர்கள். குடும்ப பொருளாதார நிலை உயரும். மருத்துவ, ரசாயன தொழில் துறையினர், நகை, ஜவுளி வியாபாரிகள் நல்ல திட்டங்களை நேரம் பார்த்து நிறைவேற்றுவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தினர் மூலம் ஆதாயங்களை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஹோட்டல், எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம். அடைவர். ரியல் எஸ்டேட் பிரிவினருக்கு காலம் கனிந்து விட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி லாங்வேஜ் சம்பந்தமான தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். காது வலி, உடல அசதி ஆகியவை ஏற்பட்டு தகுந்த ஓய்வின் மூலம் விலகும். பொது இடங்களில் பானகம், நீர்மோர், குடிநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலமும், அருகில் உள்ள கோவிலில் அபிஷேகத்திற்கு பால் தருவதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

தனுசு

நண்பர்களை அனுசரித்து செல்வதுடன், கருத்து வேறுபாடு பாராட்டுபவர்களையும் மதிக்கும் தன்மை பெற்ற தனுசு ராசியினர் இந்த வாரம் சமூக காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு வந்து சேரும். மனைவி வழி உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். ஜவுளி, சிறு, குறு தொழில் துறையினர், கட்டுமான பொருள், விளைபொருள் வியாபாரிகள் புதிய ஆர்டர்கள் கிடைத்து மகிழ்வர். தனியார் உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் வேறு ஊர்களில் புதிய கட்டுமானத் திட்டங்களை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கட்டிட பொருள் நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசாங்க போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளில் பங்கு பெறுவார்கள். சிறுநீர் தொற்று, வயிற்று வலி, பசியின்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு தகுந்த சிகிச்சை மூலம் விலகும். ஆதரவற்ற வயதான பெண்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்வதன் மூலமும், அருகில் உள்ள கோவில் மூலவருக்கு தீபம் ஏற்ற நெய் தானமாக தருவதும் பல சிக்கல்களை விலக்கும்.

மகரம்

வானத்திலேயே பறந்தாலும், பூமிதான் நிரந்தரம் என்ற உண்மை நிலையை மனதில் கொண்டு எப்போதும் செயல்படும் மகரம் ராசியினர் இந்த வாரம் புதிய தொடர்புகளை பெறுவார்கள். எதிர்பாரா செலவு உண்டு. சமூக விவகாரங்களில் கவனம் தேவை. எந்திரம், ஜவுளி தொழில் துறையினர், சாலையோர கடை வியாபாரிகள் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும். தனியார் உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண்மை, அரசு கட்டுமான நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்குவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மன உளைச்சல், மனக்குழப்பம், ஜீரண கோளாறு ஆகியவை ஏற்பட்டு தகுந்த ஓய்வு எடுப்பதன் மூலம் விலகும். வயதான தம்பதியரை வீட்டுக்கு அழைத்து வயிறார அன்னமிட்டு பரிசு பொருள்கள் கொடுத்து அவர்களுடைய ஆசிகளை பெறுவதன் மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.

கும்பம்

தனித்து திட்டமிட்டாலும், எல்லோருடனும் சேர்ந்து கூட்டாக செயல்பட்டு வெற்றி காணும் சிறப்பியல்பு உள்ள கும்பம் ராசியினர் இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பொருளாதார நிலை உயர்ந்து இல்லத்தரசிகள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவர். மருந்து, இரும்பு தொழில் துறையினர், உணவகம், மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் நடையிடுவர். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி ஆதாயத்தை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் தொழில் விருத்தி அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மசாலா பொருள் தயாரிப்பு, ஓட்டல் துறைநிறுவன பங்குகளால் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை கற்பதில் உயர் ஆலோசனை பெறுவர். கை கால் வலி, உடல் அசதி, மனக்குழப்பம், சளித்தொல்லை ஆகியவை தக்க சிகிச்சையால் விலகும். பெருமாள் கோவில் பக்தர்களுக்கு புளியோதரை தானமாக கொடுப்பதன் மூலமும், அவன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு பரிசு பொருள்கள் கொடுப்பதன் மூலமும் பல நன்மைகள் உண்டு.

மீனம்

மனதில் துணிச்சல் இருந்தாலும் அதை எல்லா நேரங்களிலும் வெளியில் காட்டிக்கொள்ளாத மீனம் ராசியினர் இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். வருமானம் உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். அச்சகம், ஹெர்பல் பொருள் தயாரிப்பு தொழில் துறையினர், மளிகை, காய்கறி வியாபாரிகள் திட்டமிட்ட லாபம் பெறுவர். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை, அரசு போட்டித் தேர்வுகளை எழுத உயர் ஆலோசனை பெறுவர். தோல் பாதிப்பு, மனக்குழப்பம் ஆகியவை ஏற்பட்டு விலகும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் தருவதன் மூலமும், கருவறையில் உள்ள மூலவருக்கு வாசனை மிகுந்த மஞ்சள் நிற மலர் மாலை சமர்ப்பணம் செய்வதன் மூலமும் பல நன்மைகள் ஏற்படும்.

 

Read Entire Article