சென்னை, டிச.5: வரும் 6, 7, 8ம் தேதிகளான வெள்ளி, சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 6ம் தேதி 155 பேருந்துகளும், 7ம் தேதி 155 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் 6ம் ேததி 40 பேருந்துகளும் 7ம் ேததி 40 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் மாதவரத்திலிருந்து 6ம் ேததி 15 பேருந்துகளும் 7ம் ேததி 15 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 5,365 பயணிகளும் சனிக்கிழமை 2,471 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,952 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
The post வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.