வாய் தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணின் தாய் அடித்துக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

6 months ago 21

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு வாட்டர் டேங்க் ரோட்டில் வசித்து வருபவர் பிரபாவதி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மாலதி என்பவருக்கும் இடையே கடந்த 31.8.2014 அன்று வாய் தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக மாலதியின் உறவினர்களான மாரிமுத்து, மணிமாறன், அரவிந்த் மற்றும் சுசீலா ஆகியோர் சேர்ந்து பிரபாவதி மற்றும் அவரது தாய் மாலாவை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் காயம் அடைந்த மாலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, மணிமாறன், அரவிந்த், சுசீலா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் மாரிமுத்து, மணிமாறன், சுசீலா ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், அரவிந்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read Entire Article