புதுடெல்லி: நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் அனைத்து சேனல்களிலும் இரவு 7 மணிக்கு குடியரசு தலைவரின் உரை இந்தியில் ஒளிபரப்பப்படும். இதனை தொடர்ந்து ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பாகும். ஆகாஷ்வானி பிராந்திய மொழி பதிப்புகள்அந்தந்த பிராந்திய நெட்வொர்க்குகளில் இரவு 9.30 மணி முதல் ஒளிபரப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வானொலியில் இன்று ஜனாதிபதி முர்மூ உரை appeared first on Dinakaran.