பாலாத்துப்பட்டி துவக்க பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

1 day ago 1

 

துவரங்குறிச்சி, ஜன. 25: வேர்ல்ட் விஷன் இந்தியா மற்றும் மருங்காபுரி வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக பாலாத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் பாலாத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மருங்காபுரி வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் சந்திரா எபினேசர் தலைமையில் விளையாட்டு காலணி, பள்ளி காலணி, பள்ளி சீருடை, விளையாட்டு சீருடை, என சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மத்திய ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, திருச்சி சைல்ட் லைன் மேற்பார்வையாளர் நிர்மலா, திலகவதி ‘வேர்ல்ட் விஷன் இந்தியா, டென்னிஸ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பாலாத்துப்பட்டி துவக்க பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article