வானூர் நீதிமன்றத்தில் ஆஜரான ‘காமெடியன்’ குணால் கம்ராவுக்கு முன்ஜாமீன்! 

1 day ago 3

விழுப்புரம்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல் நையாண்டிக் கலைஞர் குணால் கம்ரா, கடந்த மாதம் மும்பையில் உள்ள ஹேபிடட் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வரும், சிவ சேனாவின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை அவரது பெயரைக் குறிப்பிடாமல் ‘துரோகி’ என விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.

குணாலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரது பேச்சுக்கு சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்வினை ஆற்றிருந்தனர். மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "தனது கீழ்த்தரமான நகைச்சுவைக்காக குணால் கம்ரா மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

Read Entire Article