வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14 பேர் பலி

6 months ago 26

போர்ட்டு விலா,

ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு வானுட்டு. இந்த தீவில் உள்ள மொத்த மக்கள் தொகை சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

இந்நிலையில், வானுட்டு தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் போர்ட்டு விலாவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 14 பெர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது

Read Entire Article