சிவகிரி,ஜன.19: வாசுதேவநல்லூரில் திருவள்ளுவர் அறப்பணி சார்பில் 20வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அறப்பணி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜ்மோகன், துணைசெயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திருவள்ளுவர் படத்தை கணேசன் திறந்து வைத்தார். துணைதலைவர் மாடசாமி தொகுத்து வழங்கினார். விழாவில் திருவள்ளுவர் குறித்த பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா பரிசுகள் வழங்கினார். பணி நிறைவு பெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மோகனசுந்தரம், பேரூராட்சி முன்னாள் தலைவர் தவமணி, பேரூர் திமுக செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், தரணி மெட்ரிக் பள்ளி முதல்வர் குழந்தைசாமி, மாவட்ட ஓய்வூதிய சங்க தலைவர் சந்திரன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்திருந்தார். துணை செயலாளர் பிள்ளையார் சாமி நன்றி கூறினார்.
The post வாசுதேவநல்லூரில் திருவள்ளுவர் அறப்பணி ஆண்டு விழா appeared first on Dinakaran.