வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு சாத்தியமா..? தேர்தல் கமிஷன் விளக்கம்

6 days ago 5

புதுடெல்லி,

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று தனது அலுவலகத்துக்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்டு சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதற்கு தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறுகையில், "சில நாடுகள் பல்வேறு முறைகள், எந்திரங்கள் கலந்த மின்னணு வாக்குப்பதிவு முறையை பயன்படுத்துகின்றன. அவற்றில் இணையதளம் உள்ளிட்ட தனியார் நெட்வொர்க்குகளும் உள்ளன.

ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சாதாரண, துல்லியமான கால்குலேட்டர்கள் போன்று செயல்படுகின்றன.

அதை இணையதளத்துடனோ, வை-பை உடனோ அல்லது அகச்சிவப்பு கதிர்களுடனோ இணைக்க முடியாது. எனவே, தில்லுமுல்லு எதுவும் செய்ய முடியாது.

மேலும், சுப்ரீம் கோர்ட்டில் இந்த எந்திரங்கள் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. பல்வேறு காலகட்டத்தில் அரசியல் கட்சிகளும் பரிசோதித்துள்ளன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய மாதிரி வாக்குப்பதிவின்போதும் சரிபார்க்கப்பட்டுள்ளது. 5 கோடிக்கு மேற்பட்ட 'விவிபாட்' சீட்டுகள், அரசியல் கட்சிகள் முன்பு எண்ணப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது. 

Read Entire Article