
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அட்டாரி - வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.