
ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியது. 15.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 146 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது .
இந்த நிலையில், வெற்றி தொடர்பாக பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது,
இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்கள் சரியான வழியில் விளையாடுவது மகிழ்ச்சி.ரோகித் சர்மா , போல்ட், தீபக் சஹர் , சூர்யகுமார், அனைவரும் சிறப்பாக விளையாடினர் , கேப்டன் பதவி என்பது சில நேரங்களில் உள்ளுணர்வைப் பற்றியது, எப்போதும் முன்பே தயாரிக்கப்பட்ட திட்டங்களை நம்பியிருக்க மாட்டேன். எல்லா துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும், ஆட்டத்தில் மிகவும் புத்திசாலியாக இருப்பது பற்றி விவாதித்தோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் அதை எடுத்துக்கொள்வோம். இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் திருப்தி அடைகிறோம். என தெரிவித்தார் .