முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி

4 hours ago 1

சில்ஹெட்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேசம் 191 ரன்னும், ஜிம்பாப்வே 273 ரன்னும் எடுத்தது. 82 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த வங்காளதேச அணி 79.2 ஓவர்களில் 255 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 50.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் பிரையன் பென்னட் 54 ரன்னும், பென் கர்ரன் 44 ரன்னும் எடுத்தனர்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 28-ந் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது.

Read Entire Article