வாகனங்களில் கொண்டு செல்லும்போது போதிய இடைவெளியில் கால்நடைகளுக்கு உணவு: பல்வேறு விதிமுறைகளை ஐகோர்ட் உத்தரவு

3 months ago 11

சென்னை: தமிழகத்தில் இருந்து 3 கண்டெய்னர் லாரிகளில் 117 மாடுகளும், 2 கன்றுகளும் கேரளாவுக்கு அடிமாடுகளாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் செங்கல்பட்டு மற்றும் அச்சரப்பாக்கம் போலீசார், அந்த லாரிகளை மடக்கிப் பிடித்து கால்நடைகளை மீட்டு, திருவள்ளூரில் உள்ள ஒரு கோசாலைகளிடம் ஒப்படைத்தனர். இந்த கால்நடைகள் துன்புறுத்தப்படவில்லை.

எனவே, கால்நடைகளை ஒப்படைக்க வேண்டும் என கோரி உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், கால்நடைகளில் பல கருத்தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை இனப்பெருக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன என்ற வாதம் தவறானது. மனிதத்தன்மையற்ற முறையில் அவை கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கால்நடைகளை பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் கொண்டு செல்லும் போது லாரிகளில் கால்நடைகள் நிற்க போதுமான இடவசதி செய்து தரவேண்டும். முறையான காற்று வசதியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பரிசோதனை நடத்திய பிறகே கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post வாகனங்களில் கொண்டு செல்லும்போது போதிய இடைவெளியில் கால்நடைகளுக்கு உணவு: பல்வேறு விதிமுறைகளை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article