வாகன விபத்து ஏற்படுத்தும் சுங்கச்சாவடியை மாற்றக்கோரி போராட்டம்

3 weeks ago 6

ராமேஸ்வரம்,ஜன.12: ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி சுங்கச்சாவடி உள்ளது. உள்ளூர் வாகனங்களை தவிர்த்து ராமேஸ்வரத்திற்குள் வரும் அனைத்து விதமான கார்கள், சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு நகராட்சி டோல்கேட் பாஸ்டாக் மூலம் வசூல் செய்யப்படுகிறது. இது அமைந்துள்ள பகுதி மிக குறுகலான இடமாக உள்ளதால் உள்ளூர் வாகனங்களை ராமேஸ்வரத்தில் இருந்து வெளியேறும் பாதையில் அனுப்புவதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை குறைக்க டோல்கேட்டை முறையாக சீரமைப்பு செய்து கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் தலைமையில் டோல்கேட் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள டோல்கேட்டை நகராட்சி நிர்வாகம் உடனே சரி செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை டிஎஸ்பி சாந்தமூர்த்தி தலைமையில் நகர் போலீசார் கைது செய்தனர்.

The post வாகன விபத்து ஏற்படுத்தும் சுங்கச்சாவடியை மாற்றக்கோரி போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article