சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் 1ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பைவிட 90% அதிக மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 345% இயல்பைவிட அதிக மழை பெய்தது. கள்ளக்குறிச்சியில் இயல்பான மழை அளவு 6 செ.மீ. என்ற நிலையில் 28 செ.மீ. மழை பதிவானது. சென்னையில் இயல்பைவிட 83% அதிக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் மார்ச் 1ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பைவிட 90% அதிக மழை: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.