வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே 6 பேர் கொண்ட கஞ்சா விற்பனை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பசுமாத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, காருக்குள் பட்டாக் கத்திகள் மற்றும் 6 கிலோ கஞ்சா இருந்துள்ளது.
காரில் வந்த 6 பேரைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.