மலருமா மலராதா என ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்த அதிமுக - பாஜக கூட்டணி மலர்ந்தே விட்டது. அமித் ஷாவின் அழைப்பை ஏற்று சிரித்த முகத்துடன் வந்து செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா சொன்னதும் இந்த சந்திப்பின் பின்னணியில் நடந்திருப்பதும் வெவ்வேறானது என்று விவரம் அறிந்த வட்டாரத்தினர் சொல்கிறார்கள். இது ஒன்றும் தெரியாத ரகசியமும் இல்லை என்றும் அவர்களே சொல்கிறார்கள்.
முன்னதாக டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த போதே, அண்ணாமலையை மாற்ற வேண்டும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்க வேண்டும், கூட்டணி ஆட்சி என்பதைப் பற்றி எல்லாம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்திருந்தார் இபிஎஸ்.