வழிகாட்டி பலகையை மரக்கிளைகள் மறைப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

3 weeks ago 5

உடுமலை : உடுமலையில் இருந்து அமராவதி நகர் ஒன்பதாறு செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு சாலை செல்கிறது. இதன் வழியாக தினசரி ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.சின்னாறு, மறையூர், காந்தலூர், தேவிகுளம், மூணாறு செல்பவர்கள் இந்த வழியாக செல்கின்றனர்.

அமராவதிநகர் ஒன்பதாறு செக்போஸ்ட் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பலகையை சாலையின் இருபுறமும் உள்ள மரங்களின் கிளைகள் மறைப்பதால், வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை.

இதனால், மூணாறு செல்ல வேண்டிய வாகன ஓட்டுநர்கள், தவறுதலாக இடதுபக்கம் திரும்பி அமராவதி அணை நோக்கி சென்று மீண்டும் திரும்பி வரும் நிலை உள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் இவ்வாறு தடுமாற்றத்துடன் சென்று திரும்பி வருகின்றன. எனவே, வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டி பலகை தெளிவாக தெரியும் வகையில் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வழிகாட்டி பலகையை மரக்கிளைகள் மறைப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article