சென்னை: போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இன்று தாக்கல் செய்யப்படும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தீர்வு காணப்படும் என்று ஆவலோடு எதிர் பார்த்திருந்த விவசாயிகளை வழக்கம் போல நிதியமைச்சர் ஏமாற்றி விட்டார் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
வேளாண் ஆணைய பரிந்துரையான… குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்…. வேளாண் விளைப் பொருள்கள், அரசு கொள்முதல் உத்திரவாதம்… கடன் நிரந்தர நிதியம் ஆகிய கோரிக்கைகளைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாது. நிர்மலா போட்ட ராமம் ஆகும் இது. பருவ கால இடர்பாடுகள் வருடம் தவறாது பாதித்து வரும் நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பேரிடர் நிதியை உயர்த்திடும் அறிவிப்பு இல்லை.
காப்பீடு திட்டத்தை அரசின் பொது துறையே ஏற்று நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் இதில் இதுவரை 64 சதமாக இருந்த வெளிநாட்டு மூலதனத்தை 100% சதமாக உயர்த்தி மேலும் விவசாயிகளை சுரண்டுவதற்கு தான் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நலநிதி வருடத்திற்கு ரூ.6000 என்பதை 12000 ரூபாயாக உயர்த்தப்படும் என அமைச்சர்களாலே பேசப்பட்டது. இதுவரை கொடுத்து வந்த நிதி கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு தற்போது வரை இல்லை. இதிலும் ஏமாற்றமே.
பருவ கால இடர்பாடுகளால் இந்தியாவின் பல மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.இதில் வேளாண்மை உற்பத்தியே அதிகம் பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் எச்சரிக்கை பற்றி கவலைப்படாத போக்கால்… அதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு தான். பீகார் மாநிலத்திற்கு பெரிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி விதிப்பின் வரம்பை உயர்த்தியது சரிதான். ஆனால் உயர்த்தப்பட்ட அந்த வருமான வரி சலுகையை எத்தனை ஆயிரம் பேர் பயனடைவர். இந்திய மக்கள் தொகையில் வருமானவரி வரம்புக்குள் வராத நிலையில் தான் பல கோடி கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் என்பதை ஒன்றிய அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
சுருங்கச் சொன்னால்.. சாதாரண மக்களை ஏமாற்றி, வளர்ந்து வரும் நிதி நிறுவனங்களை.. பெரு நிறுவனங்களாக உயர்த்தி விடுவதற்கான அறிக்கையே. இதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வழக்கம் போல நிதியமைச்சர் ஏமாற்றி விட்டார்: ஒன்றிய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கை appeared first on Dinakaran.