எலக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா இவி, தனது தயாரிப்பான நெக்சான் இவி 45 மற்றும் கர்வ் இவி ஆகியவற்றுக்கான நிஜ வரம்பை வெளியிட்டுள்ளது. அராய் சான்றிதழின்படி மேற்கண்ட கார்களுக்கான வரம்பு 489 கிலோ மீட்டர் முதல் 502 கிலோ மீட்டர் வரை. ஆனால், அன்றாட ஓட்டுநர் அனுபவத்தில் 75 சதவீத வாடிக்கையாளர்களின் கருத்துப்படி 350 கிலோ மீட்டர் முதல் 425 கிலோ மீட்டர் வரை வரம்பு கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாக இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைவான பராமரிப்பு செலவு கொண்டவை என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் கிலோ மீட்டருக்கு ₹1 வீதம், மாதம் சராசரியாக 1,000 கிலோ மீட்டர் ஓட்டுபவர்கள் இந்த இவி கார்களின் மூலம் 5 ஆண்டில் ரூ.4.2 லட்சத்தக்கும் மேல் சேமிக்க முடியும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.