வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது

2 weeks ago 3

நெல்லை மாவட்டத்தில் உள்ள குகை கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலாகும். இக்கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் சித்திரை மாதம் நடக்கும் தேரோட்டத் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (27.4.2025) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அப்போது 'முருகனுக்கு அரோகரா' என பக்தர்கள் முழக்கமிட்டு வழிபட்டனர். கொடியேற்றப்பட்ட பின்பு கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் வாகன சேவை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே 5ம் தேதி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் மீனா மாடசாமி தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Read Entire Article