பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: இங்கிலாந்து கடற்படை தலைமை தளபதி பணியில் இருந்து விடுவிப்பு

2 days ago 5

லண்டன்,

இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் பென் கீ. இவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை ராணுவ உயர் மட்ட அதிகாரிகள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

எனவே நியாயமான விசாரணைக்காக பணியில் இருந்து தற்காலிகமாக அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார். குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் நிரந்தரமாக அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் எனவும், அதுவரை துணை அட்மிரல் மார்ட்டின் கானெல் கடற்படையின் தலைமை தளபதியாக பொறுப்பு வகிப்பார் எனவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article