வள்ளலார் எனும்தனிப் பெருங்கருணை

2 hours ago 4

ஒருமுறை கங்கைக் கரையோரம் ராமகிருஷ்ணர் நின்றிருந்தார். எதிரே ஒருவர் பலவீனமான ஒருவரை முதுகில் பளார் பளார் என்று அடிக்கும்போது இங்கு ராமகிருஷ்ணர் அலறினாராம். இவர் அலறுவதைப் பார்த்து ஓடிவந்தால் எந்த முதுகில் அவர் அடித்தாரோ அதேபோன்று இவர் முதுகிலும் வரிவரியாக ரத்தம் கட்டி இருந்ததாம். எல்லா உடம்பாகவும் உயிராகவும் இருக்கும் சர்வ வியாபகத்தன்மையையும், கருணையையும் குறிக்கும்நிலை இது.

ஞானிகளும் வள்ளலாரும் தோபா சுவாமிகள்

திருவொற்றியூரில் அவதூத சுவாமிகள் ஒருவர் இருந்தார். அவர் தெருவில் போவோர் வருவோரை, ‘‘நாய் போகுது நரி போகுது பூனை போகுது என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
இவர் போகும்போது மட்டும்… ‘‘உண்மையான மனிதன் போகிறான்’’ என்று சொன்னார். பொதுவாக அவரை நிர்வாணச் சாமியார் என்று சொன்னாலும், அவரின் உண்மையான பெயர் தோபா என்று பெயர். அவருடைய அதிஷ்டானம் வேலூரில் இருக்கிறது. அப்படி முதன் முதலாக வள்ளல் பெருமானை
அடையாளம் காட்டியது அவர்தான். ஒரு மகானை இன்னொரு மகான் தான் அடையாளம் காட்டுவார். எப்படி ரமண பகவானை சேஷாத்ரி சுவாமிகள் அடையாளம் காட்டுவாரோ அப்படித்தான்.

சிருங்கேரி 32வது பீடாதிபதி நரசிம்ம பாரதி சுவாமிகள்

சிருங்கேரி 32வது பீடாதிபதி நரசிம்ம பாரதி சுவாமிகள் – இவர் வித்யாரண்யர் பரம்பரையில் வந்த சுவாமிகள், ஒருமுறை திருவொற்றியூருக்கு வருகிறார்கள். அப்படி வரும்போது இங்கு வள்ளலார் என்கிற ஞானியைத் தான் பார்க்க விரும்பினார். மகான்களின் சந்திப்புகளில் எப்போதுமே அவர்களது பணிவு வெளிப்படும். ஞானம் வெளிப்படும். அவர்களின் கருத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதும் வெளிப்படும். ‘‘நான் வள்ளலாரை சந்திக்க வேண்டும். அதனால் நேரம் கேட்டுவிட்டு வாருங்கள்’’ என்று அனுப்புகிறார். சீடர்கள் எல்லோரும் ஆச்சரியமடைகிறார்கள். ஆச்சார்யார் அவர்களே சந்திக்க நேரம் கேட்கிறாரே என்று ஆச்சரியமடைந்தனர். வள்ளலார் பதறிப்போய் , ‘‘ஆஹா…. நானல்லவா ஆச்சார்யாளைப்போய் சந்திக்க வேண்டும். அதனால் அவரிடம் சென்று நேரம் கேட்டுவிட்டு வாருங்கள். அந்த பீடத்திற்கு நான் மரியாதை தர வேண்டும்’’ என்றார். ஆச்சார்யாளை வள்ளலார் சந்திக்கிறார். அப்போது அங்கு எல்லா சீடர்களுக்கும் ஒரு சந்தேகம் தோன்றியது. வள்ளலார் ஞானியாக இருக்கலாம். ஆனால், அவருக்கு சமஸ்கிருதம் தெரியாதல்லவா என்று நினைக்கிறார்கள். வெள்ளை ஆடைதான் அணிந்துகொண்டிருக்கிறார். முறையான துறவிபோல் தெரியவில்லை என்றெல்லாம் சுற்றியிருப்பவர் களின் மனதில் ஒடிக் கொண்டிருக்கிறது. ஆச்சார்யாள் எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டுமென்று நினைத்து, முக்கியமான வேதாந்த பாஷ்யத்திலிருந்து காண்பித்து , ‘‘எனக்கு இந்த விஷயத்தில் சில சந்தேகம் இருக்கிறது. இதற்கு விளக்கம் கொடுங்கள்’’ என்றார். சுற்றியுள்ளவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி. ‘‘ஆச்சார்யாளுக்கு சந்தேகமா.. அவரிடம் விளக்கம் கேட்கிறாரே’’ என்று வேடிக்கை பார்த்தனர். அப்போதுதான் வள்ளலார் அவருடைய சீடர்களை கூப்பிட்டு, கையிலிருந்த புத்தகத்தை கொடுத்து, ‘‘ஆச்சார்யாள்… இதற்கு விளக்கம் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அதனால் இதை நீ விளக்கிச் சொல்’’ என்று கட்டளையிடுகிறார். ஆச்சார்யாள் கேட்ட கேள்விக்கு சிஷ்யர் விளக்கம் சொன்னாராம். இப்போது ஆச்சார்யாள் எல்லோரையும் சுற்றுமுற்றும் பார்த்தாராம். இவ்வளவு முக்கியமான வேதாந்த விஷயத்திற்கு அவருடைய சிஷ்யராலேயே விளக்கம் தரமுடிகிறதெனில், அப்போது அவருடைய ஞானம் எவ்வளவு பெரியது என்பதைக் காண்பித்துக் கொடுத்தார். இன்னொரு முக்கிய விஷயமும் நடந்தது. மக்களுக்கு மொழிப் பிரிவினை இருந்தது. அதையெல்லாம் இங்கு தீர்த்து வைத்தார்கள். முக்கியமாக சமஸ்கிருதம் – தமிழுக்கும் உள்ள பிரிவினை பேதத்தை தீர்த்து வைத்தார்கள். ஆச்சார்யாள் வள்ளலாரை நோக்கி, ‘‘சமஸ்கிருதம் முக்கியம் இல்லையா.’’ என்று கேட்கிறார். ‘‘கண்டிப்பாக சமஸ்கிருதம் முக்கியமே. சந்தேகமே கிடையாது. இதுமட்டுமல்ல இந்த இரண்டு மொழிகளும் ஞானத்திற்கு முக்கியமான மொழிகள். சமஸ்கிருதம் ரொம்பவும் முக்கியம். தமிழும் ரொம்ப முக்கியம். இந்த இரண்டு மொழியுமே அத்யாத்மமான (ஆன்மிகமான) வாழ்க்கைக்கு மிகவும் தேவைப்படுவது.’’இந்த மொழியை வைத்து வேறுபடுத்தி வேறுபடுத்தி உண்மைப்பொருளை பார்க்காமல் போவதால் இதை இந்த இரு ஞானிகளும் உடைத்துப்போட்டனர். இன்றைக்கும் இவர்கள் சந்திப்பிற்கு ஞாபகார்த்தமாக திருவொற்றியூர் கோயில் ஆதிசங்கரருடைய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்கள். தொழுவூர் வேலாயுத முதலியார் தியோசாபிகல் சொசைட்டிக்குக் கடிதம் எழுதும்போது இரண்டு சகோதரர்கள் வருவார்கள். அதில் ஒருவரை மேலைநாட்டைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர் உண்மையை உண்மையாக உரைப்பார். என்று ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வருகையை ராமலிங்க அடிகள் தொழுவூர் வேலாயுத முதலியாரிடம் முன்னரே சொன்னாராம்.
(தொடரும்)

ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்

The post வள்ளலார் எனும்தனிப் பெருங்கருணை appeared first on Dinakaran.

Read Entire Article