உத்திரமேரூர் தொகுதி வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை முன்னுரிமை அடிப்படையில் கட்டப்படும்; சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

3 hours ago 1

சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், வெண்கொடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு முன்வருமா என உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், வெண்குடியில் தடுப்பணை கட்ட வேண்டியது அவசியம் தான். ரூ.70 கோடியில் 1600 மீட்டர் நீளத்தில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளது.

மேலும், தடுப்பணை கட்டினால் 12 கிராம ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும். 2400 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும்.எனவே நிதி நிலைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் வெண்குடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

The post உத்திரமேரூர் தொகுதி வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை முன்னுரிமை அடிப்படையில் கட்டப்படும்; சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article