'வளர்ந்த இந்தியா' இலக்கை அடைய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

4 months ago 16

புதுடெல்லி,

தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் இடையே புதிய தேசிய கல்விக்கொள்கை விவகாரம் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இரு அரசுகளும் இதில் பிடிவாதமாக இருக்கின்றன. இந்த நிலையில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதில்தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என கூறியிருக்கிறார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். விழாவில் 84 ஆயிரம் பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பின்னர் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்தியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பிரதமர் மோடி, இந்தியாவை 'வளர்ந்த இந்தியா'வாக மாற்ற தேசிய கல்விக் கொள்கையை வகுத்துள்ளார். அதை செயல்படுத்துவதில் முன்னணியில் இருந்த டெல்லி பல்கலைக்கழகத்தை நான் பாராட்டுகிறேன். 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை இந்தியா அடைய வேண்டுமானால், டெல்லி பல்கலைக்கழகத்தின் தலைமையில் நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். இதனால் மட்டுமே அது சாத்தியமாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article