
கால்கரி,
கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கால்கரி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகாந்த் 21-19, 14-21, 18-21 என்ற செட் கணக்கில் கென்டா நிஷிமோட்டோவிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். வெற்றி பெற்ற கென்டா நிஷிமோட்டோ இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.