குடகு: மாநில அரசு சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அவர்களின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக அரசு ரூ.10 கோடி நிதியை விடுவித்துள்ளது என எம்எல்ஏ டாக்டர் மந்தர்கவுடா தெரிவித்தார். குடகு மாவட்டம், குஷால்நகர் பிளாக் காங்கிரஸ் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த தாலுகா சிறுபான்மையினர் பிரிவு தொண்டர்கள் கூட்டம் நடந்தது. இதில், எம்எல்ஏ மந்தர்கவுடா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மாநில அரசு சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
அவர்களின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக அரசு ரூ.10 கோடி நிதியை விடுவித்துள்ளது. முதல் தவனையாக ரூ.3.5 கோடியை பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. பின்னர், ரூ.6.50 கோடி நிதியுதவியை படிப்படியாக விடுவிக்கும். அரசின் பல்வேறு குழுக்களுக்கு பெரும்பாலும் சிறுபான்மையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டத்தில் கிடைக்காதவர்களுக்கு வரும் நாட்களில் வாய்ப்புகள் வழங்கப்படும். குடகு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்த எந்த சமூகத்தையும் காங்கிரஸ் கட்சி அலட்சியப்படுத்தாது என்றார்.
The post வளர்ச்சி பணிகளுக்காக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு: எம்எல்ஏ டாக்டர் மந்தர்கவுடா தகவல் appeared first on Dinakaran.