தேனி: வருஷநாடு மலைப்பகுதியில் கரடி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(45), தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா(55). விவசாயிகளான இருவரும் கோவில்பாறை கண்மாய் பகுதியில் உள்ள தங்களது நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 7 மணி அளவில் அப்பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.