வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

2 months ago 10

 

திருவாரூர். நவ. 23: கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலும், இதேபோல் கோட்ட அளவில் ஆர்.டி.ஒக்கள் தலைமையில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியிலும் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட அளவிலான விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ந் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையலாம்.

The post வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article