வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக காஞ்சி மாவட்ட கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு

3 weeks ago 5

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி உள்ளிட்ட 4 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமியின் தாயாரின் சகோதரி ராஜேஸ்வரியின் கணவர், மனைவி ராஜேஸ்வரி பெயரில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடங்கி, காண்ட்ராக்ட் பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது, அவர் இறந்துவிட்ட நிலையில், இப்பணிகளை ராஜேஸ்வரி கவனித்து வருகிறார். இந்நிலையில், 2009ம் ஆண்டு செங்கல்பட்டு வட்ட நெடுஞ்சாலைத்துறையில் முதல்தர ஒப்பந்ததாரராக பதிவு செய்து, ராஜேஸ்வரி 2010ல் சிவில் இன்ஜினியரிங் பணிகளுக்கான ஒப்பந்தங்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 2016 முதல் 2021ம் ஆண்டு வரை குஜராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கிய அனைத்து சொத்துக்களின் மதிப்பு வருமானத்திற்கு அதிகமாக இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி, செங்கல்பட்டு கீழபாலாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் குஜராஜ், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமியின் தாயார் தமிழரசி, இவரின் சகோதரி ராஜேஸ்வரி ஆகிய 4 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக காஞ்சி மாவட்ட கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article