அதிமுக பொதுக் கூட்டத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக புதிய யுத்தியை கையாண்ட அதிமுக நிர்வாகிகள்!

2 months ago 13

திருப்பூர்: திருப்பூர் பெருமாநல்லூரில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக, பொதுக் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு புதிதாக பிளாஸ்டிக் நாற்காலி தரப்படும் என அறிவிக்கப்பட்டு, 1500 புதிய நாற்காலிகளை வாங்கி கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களை அதில் அமரவும் வைத்திருந்தார்கள்.

இதனால் பொது கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் கூட்டம் முடிந்ததும் அனைவரும் அவரவர் அமர்ந்திருந்த நாற்காலிகளை எடுத்துக் கொண்டு, கூட்டம் கூட்டமாக தலையில் வைத்து கொண்டு சென்றார்கள்.இதைப் பார்த்த ரோட்டில் சென்ற பொதுமக்கள் எல்லாரும் ஏன் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே சென்றார்கள்.

ஆனால் கூட்டம் சேர்ப்பதற்காக புது யுத்தியாக புதிதாக நாற்காலிகளை அதிமுக நிர்வாகிகள் வழங்கியது தெரிந்ததும் சிரித்தபடியே சென்றனர்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post அதிமுக பொதுக் கூட்டத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக புதிய யுத்தியை கையாண்ட அதிமுக நிர்வாகிகள்! appeared first on Dinakaran.

Read Entire Article