வருசநாடு, ஜன. 26: வருசநாடு, வாலிப்பாறை, தும்மக்குண்டு, காமராஜபுரம், சிங்கராஜபுரம், பவளநகர், முருக்கோடை, இராயக்கோட்டை, காந்திகிராமம், தண்டியகுளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் நடந்து வரும் குற்ற செயல்கள் சம்பந்தமான புகார்களை பொதுமக்கள் வருசநாடு காவல் நிலையத்தில் கொடுத்து வருகின்றனர். இந்தக் காவல் நிலையத்தில் 2 சார்பு ஆய்வாளர்கள் 30 போலீசார் பணிபுரிந்து வந்தனர். தற்போது ஒரு சார்பு ஆய்வாளர் 5 போலீசார் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால் குற்ற செயல்கள் நடந்து வரும் கிராமங்களில் போலீசார் நேரடி ஆய்வு செய்ய முடியவில்லை. மேலும் புகார்களை விசாரிக்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வருசநாடு பகுதிகளில் குற்ற செயல்களை தடுத்து நிறுத்த காலியாக உள்ள போலீசார் பணியிடங்களை விரைந்து நியமிக்க தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வருசநாடு காவல் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் appeared first on Dinakaran.