
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றியை மட்டுமே பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-ஆவது சதய விழாவை முன்னிட்டு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினோம்.
தனிப்பெரும் வீரத்தாலும் - தமிழ் மொழியின் சிறப்பை பாதுகாத்த காரணத்தாலும் வரலாற்றில் என்றும் அவர் நிலைத்திருப்பார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் புகழ் ஓங்கட்டும். என தெரிவித்துள்ளார் .