16 பந்துகளில் அரைசதம்.. ஏபி டி வில்லியர்சின் உலக சாதனையை சமன் செய்த மேத்யூ போர்டு

4 hours ago 4

டப்ளின்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கீசி கார்டி 102 ரன்களும், மேத்யூ போர்டு 58 ரன்களும் குவித்தனர். அயர்லாந்து தரப்பில் லியாம் மெக்கார்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதில் அதிரடியாக விளையாடிய மேத்யூ போர்டு 16 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற ஏபி டி வில்லியர்சின் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

பின்னர் அயர்லாந்து இலக்கை நோக்கி களமிறங்கும் தருவாயில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நீண்ட நேரமாகியும் நிற்காததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.


Read Entire Article