தர்மபுரி, மே 10:தர்மபுரி உழவர் சந்தையில் முருங்கைக்காய் வரத்து சரிந்ததால், விலை அதிகரித்து கிலோ ரூ.85க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அதகபாடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பை நல்லூர், தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிள் முருங்கை பயிரிட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் முருங்கை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைபெய்து வருவதன் காரணமாகவும், முருங்கை காய் வரத்து குறைந்துள்ளது. தர்மபுரி உழவர் சந்தைக்கு, கடந்த சில தினங்களாக 100 கிலோவிற்கும் குறைவாக அளவே முருங்கைக்காய் வந்து உள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் கிலோ ரூ.50க்கு விற்பனையான முருங்கைக்காய், நேற்று கிலோ ரூ.85க்கு விற்பனையானது.
The post வரத்து சரிவால் முருங்கை விலை உயர்வு appeared first on Dinakaran.