வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைவு

1 month ago 5

 

கடலூர், டிச. 9: வரத்து அதிகரிப்பால் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அக்கரைகோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் படகுகளில் ஏராளமான மீன்கள் கிடைத்தன.

மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்து காணப்பட்டது. வழக்கமாக ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் நேற்று ரூ.400க்கும், ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படும் பாறை மீன் ரூ.150க்கும், சங்கரா மீன் ரூ.150க்கும், இறால் வகைகள் ரூ.200 முதல் ரூ.400 வரையும், கொடுவா மீன் ரூ.500க்கும், பன்னி சாத்தான் மீன் ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் வரத்து அதிகமாக இருந்த போதும் பொதுமக்களின் கூட்டமும், வியாபாரிகளின் கூட்டமும் குறைந்த அளவே இருந்ததால் விலை குறைந்து உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

The post வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைவு appeared first on Dinakaran.

Read Entire Article